கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்காலை நினைவுகூருதல்: காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டம்
Remembering Mullivaikkaal from Kilinochchi: the Struggle for the Disappeared

2017 இலிருந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக, காணாமலாக்கப்பட்டோரின் தமிழ் உறவுகள் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வீதியோரமாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 
 
இப்போராட்டக் காலப்பகுதியில் கிளிநொச்சிப் போராட்டக் களமானது செயல்வாதத்தின் மையத்தளமாக அமைந்திருந்தது. இப்போராட்டத்தில் பங்கெடுப்போரின் அன்புக்குரியவர்கள் போரின் இறுதிப் பகுதியில் காணாமலாக்கப்பட்டிருந்தனர், அதிலும் பெரும்பாலோனோர் இலங்கை ராணுவத்திடம் கையளிக்கப்பட்டபின்னர் காணாமற் போயினர். 
 
இந்தக் காணொளியில், தமது அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கும், கிளிநொச்சி வீதியோரப் போராட்டத்தில் தொடர்ச்சியாகப் பங்கெடுக்கும், சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் மூன்று பெண்கள், முள்ளிவாய்க்கால் கொடூரங்களை அனுபவித்ததன் பத்து ஆண்டுகள், நினைவுகூரல், இராணுவமயமாக்கம் மற்றும் போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்த தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

For over two years now since February 2017, Tamil families of the disappeared have been protesting roadside across the North-East.

The Kilinochchi protest site has been a central hub of activity through this period, and most of the families here had their loved ones disappeared during the last phase of the war, many after having surrendered to the Sri Lankan armed forces.

In this piece, three Tamil women who have been active in organizing and participating in the Kilinochchi roadside protests who each have a disappeared loved one, reflect on the 10 years since the atrocities of Mullivaaikkaal which they all endured, memorialization, militarisation and the importance of protests.